2023 மே 30, செவ்வாய்க்கிழமை

தங்கமுலாம் முத்துக்களை விற்க முயன்றவர் கைது

Editorial   / 2023 மார்ச் 19 , பி.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்கமுலாம் பூசப்பட்ட போலி முத்துக்களை விற்பனை செய்ய முயன்ற குற்றச்சாட்டின் கீழ் வெலிஓயா பகுதியினை சேர்ந்த ஒருவரை முல்லைத்தீவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

 ஜனகபுரம் வெலிஓயாவினை சேர்ந்த 54 அகவையுடைய சந்தேக நபரே இவ்வாறு இன்று (19) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

போலி தங்கமுலாம் பூசப்பட்ட 1400 முத்து மணிகளை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக முல்லைத்தீவு நகரப்பகுதிக்கு வந்துள்ளார். இந்த நிலையில் குறித்த சந்தேக நபரை கைது செய்த முல்லைத்தீவு பொலிஸார் போலி முத்துக்களை மீட்டுள்ளதுடன் சந்தேக நபரையும் சான்று பொருட்களையும் 20.03.23 நாளை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.
செ.கீதாஞ்சன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .