2021 நவம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கொள்ளைச் சம்பவம்: ஐவருக்கு பிணை

Niroshini   / 2021 செப்டெம்பர் 29 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
-செ. கீதாஞ்சன்

 ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில், முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில், பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 5 பேரை,  பிணையில் விடுதலை செய்த முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம், வழக்கு விசாரணையை, ஒக்டொபர் 22ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது

கடந்த 16ஆம் திகதியன்று, புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் அமைந்துள்ள பெண்கள் தொழில் முயற்சியாளர் கூட்டுறவு சங்கம், கொள்ளையர்களால் உடைக்கப்பட்டு, பெறுமதியான பொருள்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

இதேவேளை, கைவேலி, திம்பிலி பகுதியில் அமைந்துள்ள அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றில் கடந்த வாரம் கொள்ளைச் சம்பம் பதிவாகியுள்ளது.

இயந்திரங்கள், தண்ணீர் மோட்டார்கள், எரிவாயு சிலிண்டர்கள் அடுப்புக்கள், மிதிவண்டிகள், மோட்டார் சைக்கிள், மடிக்கணினி உள்ளிட்ட இலத்திரனியல் பொருள்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

இது குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸார்  விசாரணைகளை முன்னெடுத்ததில், சந்தேகத்தின் பேரில் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 5 பேரை கைதுசெய்து, 25ஆம் திகதியன்று   சான்றுப்பொருள்களுடன், முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .