2023 ஜூன் 01, வியாழக்கிழமை

தேங்காயை உரித்து திருடிய மூவர் மடக்கிப்பிடிப்பு

Freelancer   / 2023 மார்ச் 24 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

புதுக்குடியிருப்பு - கைவேலி ஆத்திப்பிலவு பகுதியில்தென்னங்காணி ஒன்றில்  இருந்து தேங்காயினை உரித்து நேற்று கடத்தி செல்ல முற்பட்ட போது கிராம மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கைவேலி ஆத்திப்பிலவு பகுதியில் உள்ள தென்னங்காணி ஒன்றில் களவாக தேங்காய்களை பொறுக்கி அதில் 110 தேங்காயினை உரித்து பை ஒன்றில் போட்டு கட்டி, அதனை களவாக கடத்தி செல்லமுற்பட்ட வேளை கிராம மக்கள் கையும் களவுமாக பிடித்துள்ளார்கள்.

21 வயதுடைய ஆத்திப்பிலவு கைவேலியினை சேர்ந்த இளைஞனும் 19 வயதுடைய  திம்பிலி 2ஆம் வட்டாரத்தினை சேர்ந்த இளைஞன் ஒருவரும் 44 வயதுடைய குடும்ப பெண்ணும் சேர்ந்து இவ்வேளையை புரிந்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.   R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .