2021 நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

மன்னார் பொலிஸாரின் அறிவித்தல்

Niroshini   / 2021 செப்டெம்பர் 30 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் மற்றும் மன்னார் பொலிஸ் நிலையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில்,   மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுள வீர சிங்க தலைமையில், கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட 100 பாடசாலை சிறுவர்களுக்கான  கற்றல் உபகரணங்கள், இன்று (30) வழங்கி வைக்கப்பட்டன.

வறுமை கோட்டுக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 100 மாணவர்களுக்கு,  அடிப்படை கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான கற்றல் உபகரணங்கள்  வழங்கி வைக்கப்பட்டன.

அதேநேரம், கற்றல் செயற்பாடுகள் மேற்கொள்வதில் சிரமம் உள்ள மற்றும் கற்றல் உபகரணங்கள் கொள்வனவு செய்வதில் கஷ்டம் உள்ள மாணவர்களுக்கு மேலதிக கற்றல் உபகரணங்களை வழங்குவதற்கான ஏற்பாடும் மன்னார் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டது.

மேலும், தேவையுடைய மாணவர்கள் பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொள்வதன் ஊடாக கற்றல் உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளையும்  மேற்கொண்டுள்ளதாக,  மன்னார் பொலிஸ் நிலையம்  தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .