2023 பெப்ரவரி 07, செவ்வாய்க்கிழமை

மாவீரர் தின ஏற்பாடுகள் பூர்த்தி

Freelancer   / 2022 நவம்பர் 27 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன் 

முல்லைத்தீவு மாவட்டத்தின் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த அனைவரையும்  அணிதிரண்டு வருமாறும் பணிக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

உறவுகளின் போக்குவரத்து வசதி கருதி நட்டாங்கண்டலில் இருந்து 2 மணிக்கு போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து பாண்டியன் குளம், பாலிநகர், அம்பாள் புரம் ஊடாக ஒரு போக்குவரத்து சேவை இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், விநாயகபுரத்தில் இருந்து 2 மணிக்கு ஆரம்பிக்கும் மற்றுமொரு பேருந்து சேவை துணுக்காய் மல்லாவி ஊடக இடம்பெறும் எனவும்  இந்த பேருந்து சேவையை பயன்படுத்துமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X