2022 ஜனவரி 22, சனிக்கிழமை

வாழ்வை வன்முறை கொல்லும்

Editorial   / 2020 ஏப்ரல் 20 , பி.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊர் அடங்கி உலகடங்கி 
விலங்குகள் மட்டும் நிம்மதியாய் சுதந்திரமாய்
முன்னம் பொழுதுகளில் நடந்த தங்கள் பாதைகளில் 
நடக்கின்றன.

வளிமாசடைதல் இல்லை
நீர் நிலை அசுத்தம் இல்லை 
இயற்கை மீண்டும் மீள் சுழற்சி செய்கின்றது

மனிதர் வீட்டுள் முடங்கி 
யன்னல் கதவின் இடுக்கின் வழி உலகை நோக்கிய படி
அவள் மட்டும் எழுவாள்
அதே பதட்டத்தோடு
காலை மாலை மதியம் சமைக்கத் தொடங்கி 
குழந்தைகளை குழிப்பாட்டி சோறூட்டி
குழந்தைகளை தூங்க வைத்து தான் குழித்து உண்டு உறங்கி விழித்து
இடைஇடையே கணவன் கொறிக்க நொறுக்குத்தீன் கொடுத்து
டிவி செய்தி, லுடோ, தாயம், பொழுதுகள் அலுப்பின்றப் போக  அவன் ஆணாய்
இடைஇடையே வீட்டில் இருந்த படியே 
அரச ஊழியர்களைப் பணியாற்றுமாறு அரச செய்திகள் தொடர

மீண்டும் மீண்டும் சமைத்து கணவன் கடமை ஆற்றி 
பெய் என பெய்யும் மழை
கற்பின் இலக்கணத்தை முதுகில் சுமந்த படி
காசு தேடி 
கறி தேடி
அரிசி தேடி
சமுர்த்தி பணம் பெற நடுவெயிலில் கியுவில் நின்று
உறைப்பு கூட
உப்பில்ல
உனக்கு கொழுப்பும் கூட
உதைத்துத் தள்ளி
தலைமுடி பிடித்திழுத்து 
சுவற்றில் மோதி
கணவனாய் ஆணாய் தலைவனாய் 
பல்வேறு அவதாரங்கள் 

ஆம்பிள வீட்டில் சும்மதானே இருக்கான் நாமதான் அனுசரித்துப் போகணும்
இவ்வளவு காலமும் உழச்சவன் தானே
சுவர்கள் யன்னல்கள் காவுகள் எல்லாம் விழுங்க சுவரோடு ஒரு சுவராய்
காதல்
நம்பிக்கை
பொருத்தங்கள் திருமணங்கள் 
மந்திரங்கள்
எல்லாம் பொய்த்து போயின 

 

- கி.கலைமகள்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X