2021 டிசெம்பர் 03, வெள்ளிக்கிழமை

வீதி அபிவிருத்தி பணிக்கான பொருள்கள் களவு

Niroshini   / 2021 செப்டெம்பர் 30 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ. கீதாஞ்சன்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட இருவேறு பகுதிகளில் வீதி அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த பகுதிகளில் அபிவிருத்தி பணிக்காக பயன்படுத்தப்பட்ட இரும்பு பொருள்கள் களவாடப்பட்டுள்ளதாக, புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு - மன்னாகண்டல் வீதியின் 6 கிலோமீற்றர் வீதி மற்றும் பாலம் திருத்த பணிகள் ஒப்பந்தக்காரர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதுக்குடியிருப்பு - பரந்தன் வீதியில் காளிகோவிலடி பாலம் புனரமைக்கப்பட்டு வருகின்றன.

இவ்விரண்டு இடங்களிலும் அபிவிருத்தி பணிக்காக பயன்படுத்தப்பட்டு வந்த சில இரும்பு பொருள்களே களவாடப்பட்டுள்ளதாக, புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்பந்தக்தாரர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்த புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X