Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Freelancer / 2022 ஜூலை 04 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
வவுனியாவில் இருந்து முல்லைத்தீவிற்கு வந்த வவுனியா சாலைக்கு சொந்தமான இ.போ.ச பேருந்து ஒன்றை, நேர அட்டவணைக்கு மாறாக சாரதி எடுத்துச் செல்லமுற்பட்ட போது குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த பேருந்தில் மக்கள் ஏறுவதற்கு முன்னதாகவே அதை கவனிக்காது பேருந்தை சாரதி செலுத்திய நிலையில், வீதியில் கூடிய ஏனைய சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பேருந்தினை மறித்தபோதும் அதனை பொருட்படுத்தாது பேருந்தினை எடுத்துச் சென்றுள்ளார்.
இதன்போது மக்கள் சிலர் மீது பேருந்து மோத முற்பட்டபோதும் பேருந்தில் ஏறிய பயணிகளை உரியவகையில் ஏற்றாதும் அபாயகரமான முறையில் சாரதி பேருந்தினை எடுத்து சென்றார்
இதனை தொடர்ந்து பேருந்தினை துரத்தி சென்ற சிலர் அதை மறித்துள்ளதுடன் சாரதி மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.
இதன்போது காயமடைந்த சாரதி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பேருந்தினை முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளார்கள்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் . (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago