2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

தடை உத்தரவை மீறி அஞ்சலி செலுத்தினார் பீற்றர் இளஞ்செழியன்

Niroshini   / 2021 செப்டெம்பர் 26 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன், செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவில் பிரத்தியேக இடத்தில்  தியாக தீபம் திலீபனுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர் அ.ஜே. பீற்றர் இளஞ்செழியன், இன்றைய தினம் (26) காலை 11 மணியளவில் மலர் தூபி பொதுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.

நேற்று (25)  பீற்றர் இளஞ்செழியனுக்கு அவரது தந்தையாரின் பெயரில் முல்லைத்தீவு நீதிமன்றத்தால்  வழங்கப்பட்ட கட்டளையை வழங்க வந்த பொலிஸாரிடம், இறந்த எனது தந்தைக்கு உண்ணபிலவில் அமைந்துள்ள கத்தோலிக்க சேமக்காலையில் சென்று வழங்குமாறு தெரிவித்து,   முல்லைத்தீவு தலைமை பொலிஸ் அதிகாரி உள்ளிட்டவர்களை பீற்றர் இளஞ்செழியன் திருப்பி அனுப்பினார்.

இந்நிலையில், பீற்றர் இளஞ்செழியனின் வீட்டை சுற்றி புலனாய்வளர்கள், இராணுவத்தினர், பொலிஸார் கண்காணித்து வருவதாகவும் அறியமுடிகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .