2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

1,500 கிலோகிராம் கடல் அட்டைகள் பறிமுதல்

Niroshini   / 2021 செப்டெம்பர் 20 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

'மனோலி' தீவு வழியாக இலங்கைக்கு கடத்திய 1,500 கிலோ கடல் அட்டைகளை, இந்திய கடலோரக் காவல் படை, வனவளத்த்துறை அதிகாரிகள் ஆகியோர் இணைந்து, நேற்று  (19) மாலை கைப்பற்றியுள்ளனர்.


இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள இந்திய  கடலோரப் படை வீரர்கள், வனவள ஊழியர்கள் ஆகியோர், மன்னார் வளைகுடா கடல் பகுதியில், ஹோவர் கிராப்ட் மூலம், நேற்று   கூட்டு ரோந்து நடவடிக்கைக்குச் சென்றனர். 

இதன் போது, மனோலி தீவு பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நின்ற நாட்டுப்படகை அவதானித்த படையினர், அந்தப் படகை நோக்கி செல்லுகையில்,  அந்த நாட்டுப்படகில் இருந்த 4 பேர் தப்பி ஓடினர். 

இதையடுத்து, பதிவு எண் இல்லாத குறித்த நாட்டுப்படகில் இருந்து கடல் அட்டை மூட்டைகளை கைப்பற்றி,  மண்டபம்  வனத்துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .