2021 நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

10 கிலோகிராம் ஐஸ் குறித்து விசேட விசாரணை

Editorial   / 2021 ஒக்டோபர் 03 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

  எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, முருங்கன்  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சுமார் 10  கிலோகிராம் ஐஸ் போதைப் பொருட்களுடன் 2 பேர். வெள்ளிக்கிழமை (1) இரவு கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பில் வி​சேட விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, முருங்கன் நிலையம் அருகேயுள்ள பொலிஸ் சோதனை சாவடியில், லொறியொன்று சோதனைக்காக மறிக்கப்பட்டது. எனினும், பொலிஸாரின் கட்டளைகளை மீறி பயணித்துள்ளார்.

எனினும், அந்த லொறியை மடக்கிப்பிடித்த பொலிஸார், சோதனை நடத்தியுள்ளார். அந்த லொறியில் 10 பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த  10 கிலோகிராம்  ஐஸ் போதைப் பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

 

  லொறியின் சாரதி உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். இவ்விருவரும் வவுனியாவைச் சேர்ந்த 30 மற்றும் 42 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

முருங்கன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில்   ஆஜர்படுத்தப்பட முருங்கன் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .