Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Freelancer / 2021 ஜூலை 27 , பி.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
சினோவக் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக் கொண்டதன் பின்னர், உடலில் உண்டாக்கப்படும் பிறபொருள் எதிரிகளின் செயற்றிறன் 6 மாதங்களில் குறையத்தொடங்குவதாக சீன ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனினும், பூஸ்டர் எனப்படும் மேலதிமாகச் செலுத்தப்படும் தடுப்பூசி,அதாவது மூன்றாவது டோஸ், அதன் செயற்றிறனை மேம்படுத்தி பிறபொருள் எதிரிகளைத் தூண்டும் என்றும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இரண்டாம் தடுப்பூசி போடப்பட்டு ஆறிலிருந்து 8 மாதங்களுக்குள், மேலதிமாக தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டால், நோய் எதிர்ப்புச் சக்தி மூன்று மடங்காகப் பெருகும் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
18 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களிடம் இருந்து பெறப்பட்ட இரத்த மாதிரிகளைக் கொண்டு நடத்தப்பட்ட பரிசோதனைகளிலேயே இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
04 Jul 2025