2022 ஜனவரி 22, சனிக்கிழமை

73 ஆயிரம் மெற்றிக் டொன் உரம் மாத்திரமே தயாரிப்பு

Niroshini   / 2021 ஒக்டோபர் 19 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில், தற்போதைய போகப் பயிர்ச்செய்கைக்கு,  1 இலட்சத்து 50 ஆயிரம் மெற்றிக் டொன் சேதன உரம் தேவையாக உள்ள நிலையில், 73 ஆயிரம் மெற்றிக் டொன் சேதன உரம் மாத்திரமே தயாரிக்கப்பட்டு இருப்பதாக, மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில், வருடந்தோறும், பெரும்போகத்தில் 28 ஆயிரத்து 395 ஹெக்டயர் நிலப்பரப்பில் பயிர்ச்செய்கை மேற்கொள்வது வழமையாகும்.  இதில், 21 ஆயிரத்து 302 ஹெக்டயர் நிலப்பரப்பில், நெற் செய்கையும் 4 ஆயிரத்து 419 ஹெக்டயர்; நிலப்பரப்பில், உப உணவு செய்கைகளும் 971  ஹெக்டயர்; நிலப்பரப்பில், தோட்டப் பயிர்ச்செய்கையும்  1,700 ஹெக்டயர் நிலப்பரப்பில் ஏனைய பயிர்செய்கைகளுமாக பயிரிடப்படவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X