Johnsan Bastiampillai / 2021 ஜனவரி 22 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுற்றுலா, தொழிற்துறை சம்மேளனத்தின் தலைவர் ஏ.எம். ஜவ்பர்
சுற்றுலாப் பயணிகளுக்காக சர்வதேச விமான நிலையங்களை மீளத் திறந்துள்ளமைக்காக சுற்றுலா, தொழிற்றுறை சம்மேளனம், சம்பந்தப்பட்ட சகல தரப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் நாட்டின் சுற்றுலாத்துறை பெரும் பின்னடைவுகளை எதிர்கொண்டிருந்தது. 30 வருடங்களாக நிலவிய யுத்தம், சுனாமி அனர்த்தம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள், தற்போது கொவிட்-19 நோய் பரவல் போன்றன அவற்றில் அடங்குகின்றன.
தற்போது சுற்றுலாத் துறையில் சுமார் 3 மில்லியன் பேர் வரை தங்கியுள்ளதுடன், கடந்த மார்ச் மாதம் முதல், கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் ஆரம்பமானதால் அவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையங்களைத் திறந்துள்ளமையானது, சுற்றுலாத் துறைக்கு நிவாரணமாக அமைந்திருக்கும் என்பதுடன், அத்தியா வசியமான அந்நியச் செலாவணியைப் பெற்றுக் கொடுப்பதாகவும் அமைந்திருக்கும்.
கடுமையான சுகாதார விதிமுறைகளின் கீழ் விமான நிலையங்களைத் திறப்பது என்பது, எதிர்வரும் சில மாதங்களில் துறையை வழமைக்குக் கொண்டு வர உதவியாக அமைந்திருக்கும் எனத் தாம் எதிர்பார்ப்பதாக சுற்றுலா, தொழிற்துறை சம்மேளனத்தின் தலைவர் ஏ.எம். ஜவ்பர் தெரிவித்தார்.
51 minute ago
55 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
55 minute ago
1 hours ago
2 hours ago