2021 செப்டெம்பர் 25, சனிக்கிழமை

தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பாக விசேட கவனம்

Editorial   / 2017 ஒக்டோபர் 23 , பி.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க விசேட கவனம் ​செலுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அமைச்சின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
 
அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்துள்ளதோடு, அதற்கான தீர்வுகளை வளங்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.

இதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக ஓவ்வொரு புதன்கிழமையும் மக்களை சந்திப்பதற்கான நாளாக அமைச்சர் ஒதிக்கியுள்ளார். மேலும் அமைச்சர் ஒவ்வவொரு மாதமும் முதல் வியாழக்கிழமை மற்றும் மூன்றாம் வியாழக்கிழமைகளில் அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் ஊழியர்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .