2021 ஜூலை 28, புதன்கிழமை

எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயம் பூட்டப்பட்டது

Editorial   / 2021 மே 24 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.

இந்நிலையில், கொழும்பு மார்கஸ் பெர்ணான்டோ மாவத்தையிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் காரியாலயம் மூடப்பட்டுள்ளது.

“அந்தக் காரியாலயம் இன்றிலிருந்து தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும்” என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

“எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தின் பணியாட் தொகுதியினர், சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, தனிமைப்படுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்” என்றும் அவர் தெரிவித்தார்.

“இந்நிலையில், அத்துல்கோட்டையில் இருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான காரியாலயத்தின் செயற்பாடுகள் மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்றும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .