2023 செப்டெம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

களுத்துறை சிறுமி படுகொலை: விசாரணையில் திடீர் திருப்பம்

Editorial   / 2023 மே 17 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை நகரிலுள்ள ஐந்து மாடிகளைக் கொண்ட ஹோட்டலில், மூன்றாவது மாடியில் இருந்து நிர்வாணமாக கீழே தள்ளி 16 வயதான சிறுமி படுகொலைச் செய்யப்பட்ட சம்பவம் ​தொடர்பிலான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட சந்தேநகபர்கள் நால்வரிடமும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், களுத்துறை சிறைச்சாலைக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர் என அறியமுடிகின்றது.

இதற்கான விசேட அனுமதியை, களுத்துறை நீதவான் ஹேமாலி ஹால்பந்தெனிய வழங்கியுள்ளார் என்று குற்றப்புலனாய்வு திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தேகநபர்கள் நால்வரிடம் மட்டுமன்றி தற்போது பிணையில் விடுக்கப்பட்டுள்ளன ஹோட்டலின் வரவேற்பாளராக கடமையாற்றும் பெண்ணிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X