2023 செப்டெம்பர் 28, வியாழக்கிழமை

அசிங்கமான வேலை செய்த: 2 மாணவர்களுக்கு வலை

Editorial   / 2023 மார்ச் 12 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தரம் 6இல் கல்விப்பயிலும் மாணவன் ஒருவனை, தரம் 11இல் கல்விப்பயிலும் மாணவர்கள் இருவர், பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ் தேடப்பட்டுவருகின்றனர்.

பாடசாலைக்குள் வைத்தே இவ்வாறு பலமுறை அந்த மாணவனை இவ்விரு மாணவர்களும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளனர்.

அச்சுறுத்தி மறைவான இடத்துக்கு கூட்டிச்சென்று, இருட்டான பிரதேசத்தில் வைத்து அவருடைய காற்சட்டையை கழற்றி, வாயை ஒருவர் பொத்திக்கொள்ள, மற்றொருவர் பாலியல் துஷ்பியோகம் செய்துள்ளார். அவ்வாறே இவ்விரு மாணவர்களும் அந்த மாணவனை மாறி, மாறி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளனர்.

தெஹிவளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது என்றும் விசாரணைக​ள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விரு மாணவர்களும் அந்த மாணவனை பல தடவைகள் இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளனர் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது எனத் தெரிவித்த பொலிஸார், அவ்விரு மாணவர்களையும் கைது செய்வதற்காக வலை வீசப்பட்டுள்ளது என்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .