2021 டிசெம்பர் 03, வெள்ளிக்கிழமை

அசாத் சாலியின் பிணைக் கோரிக்கை நிராகரிப்பு

Editorial   / 2021 செப்டெம்பர் 14 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பிணைக் கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அவர், விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அசாத் சாலியின் விளக்கமறியல் இன்று 14 வரையிலும் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டிருந்தது.

சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டதன் காரணமாக கைதுசெய்யப்பட்டுள்ள அசாத் சாலி  மீதான வழக்கு, கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஸ்ரீ ராகல முன்னிலையில் ஓகஸ்ட் மாதம் (31) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அன்றைய உத்தரவின் பிரகாரமே இன்று (14) வரையிலும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.

2021 மார்ச் 9 ஆம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் சர்ச்சையான கருத்தொன்றை வெளியிட்டமை தொடர்பில், மார்ச் 16 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி,  கைதுசெய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X