Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2021 மே 12 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல பாதாளக்குழுவொன்றின் தலைவரான “ஊரு ஜுவா” எனப்படும் மாபுலகே தினித் மிலான் என்பவர், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
தெடிகமுவ பிரதேசத்திலுள்ள பாழடைந்த வீடொன்றிலேயே இவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதுடன், இவரது மரணத்தையடுத்து நவகமுவ, தெடிகமுவ மற்றும் வந்துராமுல்ல பிரதேசவாசிகள் பட்டாசு வெடித்து தமது மகிழ்ச்சியை வெளிபடுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மனித கொலை,கடத்தல், கப்பம் கோருதல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் தொடர்பில் நீண்டகாலம் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த இவர், நேற்று முன்தினம் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையிலேயே நேற்று (11) இரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .