2022 மே 18, புதன்கிழமை

147 பேர் அதிரடி கைது

Freelancer   / 2021 டிசெம்பர் 19 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 147 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பண்டிகைக் காலங்களில் குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கில் மேல் மாகாணத்தில் வீதித் தடைகள் மற்றும் நடமாடும் ரோந்துப் பணிகளைப் பயன்படுத்தி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையின் போது ​​11,162 வாகனங்களும், 15,685 நபர்களும் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .