A.P.Mathan / 2011 மார்ச் 24 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
எதிர்வரும் ஜூன் மாதம் சீனாவில் நடைபெறவுள்ள குன்மிங் சர்வதேச வர்த்தக கண்காட்சியில் இலங்கையினையும் பங்கு கொள்ளுமாறு சர்வதேச வர்த்தகத்தை ஊக்குவிக்கும் சீனா கழகத்தின் உப-தலைவர் ஹூ ஆங் ஷா அழைப்புவிடுத்துள்ளார்.
கைத்தொழில் வணிக அமைச்சர் றிசாத் பதியுதீனை அவரது அமைச்சில் சந்தித்தபோதே இந்த அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதம் 5ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதிவரை சீனாவின் குன்மிங்கில் இடம்பெறவுள்ள இக்கண்காட்சியில் இலங்கையின் உற்பத்திகளை காட்சிப்படுத்த முற்றிலும் இலவசமாக 100 காட்சி கூடங்களை வழங்குவதற்கு உபதலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீனிடம் உறுதியளித்துள்ளார்.
கண்காட்சிக்கு இலங்கையிலிருந்து கொண்டுவரப்படும் பொருட்களுக்கான சுங்க தீர்வையினை வழங்குவதுடன், பொருட்களை ஏற்றி இறக்குவதற்கு தேவையான வசதிகளை தாம் செய்து கொடுப்பதற்கு தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சீனாவுக்கும் இலங்கைக்குமிடையிலான வாத்தக உறவு மிகவும் முக்கியமானது என்று அமைச்சர் சுட்டிக்காட்டியதுடன், பொருட்கள் ஏற்றுமதியில் சீனா 2ஆவது இடத்தில் இருப்பதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் - உப தலைவர் ஹூ ஆங் ஷாவிடம் எடுத்துரைத்தார்.

25 Nov 2025
25 Nov 2025
25 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Nov 2025
25 Nov 2025
25 Nov 2025