2022 ஜூலை 06, புதன்கிழமை

பெண்னொழுக்கம் என்றால் என்ன?

Editorial   / 2019 ஓகஸ்ட் 23 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண் ஆணின் பலம் சார்ந்த அல்லது ஆதிக்கம் சார்ந்த கட்டுப்பாட்டிக்குள் இருக்கின்ற அடிமை முறையா? பெண்ணுடலை ஆண்கள் விதித்த விதிகளுக்கு அமைய இயங்கச் செய்வதுதான் ஒழுக்கமா?

காலங்காலமான இந்த அதிகார மனப்பிறழ்வுச் செயற்பாடுகளும், கருத்துகளும் மிகவும் சலிப்பாக இருக்கின்றன.
எங்குப் பார்த்தாலும் பெண்ணுடல்களை மொய்க்கின்ற இயந்திரங்கள், பாலியல் சுரண்டல்கள், சிந்தனைச் சுரண்டல்கள், மத அடிப்படைவாதச் சுரண்டல்கள்.

சிறு வயதிலிருந்தே நமது சிந்தனைகளைக் கல்வி நிறுவனங்களும் மதக் கதையாடல்களும் வர்த்தக நுகர்வுப் பண்பாடுமே அதிகம் தீர்மானிக்கின்றன. பிறக்கும் போது, வெறும் உடலுடன் எப்படி பிறக்கிறோமோ அதே போலதான் நமது சிந்தனைகளும் இருந்தன.   

ஆனால், சூழல் இயற்கைக்கு மாறாக சுயநலக் குரூரத்துடன் இப்பா டித்தான் சிந்திக்க வேண்டும்; இப்படித்தான் வாழ வேண்டும் என்ற ஒரு முறைமையை பழக்கப்படுத்தி திணித்து வந்திருக்கிறது. அந்தப் பழக்கம், நம்மை ஒரு போதும் பிற நலன்கள் சார்ந்து சிந்திக்கவிடாது.

அமைப்பியல்களுக்கும் அதிகாரங்களுக்கும் எதிராக சிந்திப்பவர்களால்தான் உலகையே எல்லோருக்குமான உலகாக மாற்ற முடியும். அதன் மூலமாகத்தான் இந்த உலகை நம் எல்லோருக்கும் பொருத்தமானதாக, எல்லோரையும் எல்லாவற்றையும் ஏற்றும், மதித்தும் வாழத்தக்க இடமாக மாற்றமுடியும்.

-றபியூஸ்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .