2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

’அவமான உணர்வு’ பாதிக்கப்பட்ட பெண்களுக்கானதல்ல

Editorial   / 2020 ஜூன் 10 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆண், பெண் பாலினங்கள் தாண்டி, குழந்தைகள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்பதுதான் யதார்த்தம். குடும்பம் என்ற நிறுவனம், அதிகாரத்தின் - அரசின் நுண்களம். அதில் பெண்களுக்கிணையாக குழந்தைகளும் வன்முறைக்கு உள்ளாகிறார்கள். இன்னும் நுட்பமாகப் பார்த்தால், லிங்கமய்யச் சமூகம், ஆண்களையும் ஒடுக்கித் தான் வைத்திருக்கிறது.

ஆண்மை - பெண்மை என்ற கற்பிதங்களுக்கேற்ப வாழ எத்தனித்து, தங்கள் உண்மையான சுயத்தைத் தொலைத்து விட்டு யாருக்கோ எதையோ நிரூபிப்பதே வாழ்க்கை என்று மனிதக்கூட்டம் நம்புகிறது. மற்றபடி, எல்லாத் துறைகளிலும் பாலின ரீதியாக நடத்தப்படும் அதிகாரத் துஷ்பிரயோகங்களை பாலியல் துன்புறுத்தல்களை, அத்துமீறல்களை அம்பலப்படுத்துவதும், “அவமான உணர்வு“ குற்றம் புரிந்தவர்களுக்கானதே ஒழிய, பாதிக்கப்பட்ட பெண்களுக்கானதல்ல என்ற நீதியை யதார்த்தமாக்குவதற்கும், உலகமெங்கும் எழும்பிய "மீ டூ" குரல்களில் ஒரு சிறிய அளவு, பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நாடுகள் வரிசையில் முதலிடம் வகிக்கும் இந்தியாவிலும் எதிரொலித்தது.

அதைச் சிதறடித்து, மழுங்கடித்து, மௌனமாக்கி, கேலிக்குட்படுத்தி, அவதூறு வழக்குகள் போட்டு, கோர்ட்டுக்கு இழுப்பவர்களின் கையில் குற்றத்தின் இரத்தம் இருக்கிறது. அவர்களை நோக்கி என் நடு விரலைக் காட்டிட விரும்புகிறேன்.

மேலுள்ள இந்தக் கருத்து, தமிழ் நாட்டில் மிகப் பிரபலமான கவிஞனரும் குறும்பட இயக்குநரும், செயற்பாட்டாளருமான லீனா மணிலேகலையினுடையது. “தகவு” இலக்கிய இதழில் பிரசுரமாகியிருக்கும் அண்மைய நேர்காணல் ஒன்றிலேயே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள், தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்த, வீ டூ என்ற ஹேஸ்டேக் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பிரபலமாகி வரும் அந்த ஹேஸ்டேக் மூலம், 1,600 பேர் தங்களுக்குப் பெண்களால் நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்துப் பதிவிட்டுள்ளனர் என, விக்கிபீடியா தரவுகளைத் தருகிறது. இவ்வியக்கம் குறித்த உங்களது பார்வை என்ன? - இவ்வாறு கேட்கப்பட்ட கேள்விக்கு லீனா அளித்துள்ள பதிலே மேலுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .