2021 ஒக்டோபர் 21, வியாழக்கிழமை

ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் சீன சைபர் உளவாளிகள் நியமனம்

Editorial   / 2021 செப்டெம்பர் 17 , பி.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தங்களின்  கடும்போக்கு ஆட்சிக்கு எதிராக நடக்கும் கிளர்ச்சிகளை தடுப்பதற்காகவும், ஆப்கானிஸ்தான் பொதுமக்களை கண்காணிக்கும் வகையிலும் சீன சைபர் உளவாளிகளை நியமித்துள்ளனர். பீஜிங் இதற்காக தனது சிறந்த தகவல் தொடர்பு நிபுணர்களை காபூலுக்கு அனுப்பியுள்ளது.

சமூக ஊடகங்களில் கிளர்ச்சிகள்  ஏற்படுவதைத்தடுப்பதே இதன் நோக்கம்  என்று மேற்கத்தைய உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க ஆதாரம் ஒன்றின்படி சீனா தலிபான்களை வழிநடத்தி வருகிறது என்று தெரிவித்தது.

சைபர் உளவாளிகள் நியமனமானது  தலிபான்களுக்கு மிகுந்த சக்தியையும் முழு நாட்டையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக்கூடிய நிலையையும் ஏற்படுத்தும். தலிபான்கள் வேட்டையாடும் நபர்களான முன்னாள் அதிகாரிகள் பாதுகாப்பு அதிகாரிகள், மற்ற வலைத்தளங்களுடன் கொண்டுள்ள தொடர்புகளைக் கண்டறிய உதவும்.

தேசிய எதிர்ப்பு முன்னணி (National Resistance Front) மற்றும் பெண்கள் உரிமை செயல்பாட்டாளர்கள் போன்ற குழுக்கள் பெரும் ஆதரவைப்பெறும் என்று தலிபான் தலைவர்கள் அச்சமடைகின்றனர்.

இவர்களின் போராட்டங்களை தலிபான்கள் ஏற்கனவே தடை செய்துள்ளனர். சீனா தனது நாட்டில் உள்ளதைப் போன்று கண்காணிப்பு அமைப்புகளை நிறுவுமானால் தலிபான்கள் மக்கள் மத்தியில் பெரும் அதிகாரத்தை செலுத்தும் நிலைமை உருவாகும் என்று கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X