Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2021 நவம்பர் 22 , மு.ப. 08:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
”நன்றி தெரிவிக்கும் நாள்” என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளில் கொண்டாடப்படுகின்ற ஒரு பாரம்பரியமான பண்டிகை ஆகும்.
இப்பண்டிகையானது தற்போதைய காலக்கட்டத்தில் அரசியல், சமூக, கலாச்சார,சமய முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் கொண்டாடப்படுகிறது.
குறிப்பாக இந்நாளில் அமெரிக்கர்கள் வான்கோழிகளை சமைத்து உண்ணுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இருப்பினும் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருப்பவர்கள், நன்றி தெரிவிக்கும் நாளுக்கு முன்பு 2 வான்கோழிகளுக்கு மட்டும் பொதுமன்னிப்பு அளிப்பது அங்கு பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகிறது.
அவ்வாறு பொதுமன்னிப்பு வழங்கப்படும் 2 வான்கோழிகள், நாட்டிலுள்ள உயிரியல் பூங்காக்களுக்கு பரிசாக அளிக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு நன்றி தெரிவிக்கும் நாளை முன்னிட்டு ‘ஜெல்லி’ மற்றும் ‘பீனட் பட்டர்’ என பெயரிடப்பட்ட 2 வான்கோழிகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இந்த சுவாரஸ்ய நிகழ்வு அங்கிருந்தவர்களிடையே கலகலப்பை ஏற்படுத்தியது.
11 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
29 minute ago