2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

பொருளியலுக்காக 3 பேருக்கு நோபல் பரிசு

Freelancer   / 2021 ஒக்டோபர் 11 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் கார்ட், ஜொஷ்வா டி அங்ரிஸ்ட், கியூட்டோ இம்பென்ஸ் ஆகியோருக்கு பொருளியல் விஞ்ஞானத்துக்கான நோபல் பரிசு பகிரிந்து அளிக்கப்பட்டுள்ளதாக நோபல்  பரிசுக்குழு அறிவித்துள்ளது.

உலக அளவில் கௌரவம் மிக்க விருதாக கருதப்படும் நோபல் பரிசு, சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டொக்ஹோமில் 4ஆம் திகதி முதல் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றையதினத்துடன், பரிசு அறிவிப்பு நிறைவடைந்தது.

பௌதிகவில், மருத்துவம், இரசாயனவியல், பொருளியல் விஞ்ஞானம், இலக்கியம், அமைதி ஆகியவற்றுக்கான நோபல் பரிசுகள் வழங்கப்பட்டிருந்தன.

அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் கடந்த வெள்ளிக்கிழமை நோர்வே நாட்டில் அறிவிக்கப்பட்டது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .