2023 ஒக்டோபர் 03, செவ்வாய்க்கிழமை

”மனைவிகளுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்யப் போகிறேன்”

Ilango Bharathy   / 2022 டிசெம்பர் 29 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உகாண்டாவை சேர்ந்த மூசா என்ற 67 வயதான நபருக்கு,  12 மனைவிகள்,  102 குழந்தைகள் மற்றும் 568 பேரக்  குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் அண்மையில் மூசா பிரபல ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் "இனிமேல் என்னால் முடியாது, நான் எனது மனைவிகளை  குடும்பக்  கட்டுப்பாடு செய்யுமாறு கூறியுள்ளேன்” எனத் தெரிவித்திருந்தமை  ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

செல்வந்தரான மூசா  தன்னுடைய 16 வயதில் திருமணம் செய்து கொண்டதாகவும், தனது  சொத்துக்களை விரிவாக்கம் செய்ய முடிவெடுத்தே அடுத்தடுத்து திருமணங்களைச்  செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த செவ்வியில்”என்னால் இதற்கு மேல் ஒரு குழந்தையையும் கவனித்துக் கொள்ள முடியாது. எல்லா மனைவிகளையும் குடும்ப கட்டுப்பாடு செய்ய சொல்லி அறிவுறுத்திவிட்டேன்.எனது 102 பிள்ளைகளையும் அவர்களது  பெயரை நினைவுபடுத்தி அழைக்க முடியவில்லை.

 இனிவரும் சந்ததிகளுக்கு நான் ஒரு அறிவுரை சொல்ல விரும்புகிறேன் 4 மனைவிகளுக்கு மேல் திருமணம் செய்யாதீர்கள், ஏன் என்றால் இங்கு எதுவும் நாம் நினைப்பது போல மகிழ்ச்சியாக இல்லை" இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் குறித்த செவ்வியானது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .