2023 ஒக்டோபர் 03, செவ்வாய்க்கிழமை

ரொனால்டோவின் சாதனையை முறியடித்த மெஸ்ஸி

Ilango Bharathy   / 2022 டிசெம்பர் 22 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

காற்பந்து ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்ற FIFA 2022  உலகக்கோப்பைத் தொடரானது கடந்த 20 ஆம் திகதி கட்டாரில்  கோலாகலமாக ஆரம்பமாகி  கடந்த (18) நிறைவடைந்தது.

அந்த வகையில் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை  வீழ்த்தி  பிரபல காற்பந்து வீரரான மெஸ்ஸியின் ஆர்ஜென்டீனா அணி சம்பியனானது.

இப்போட்டியை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான காற்பந்து ரசிகர்கள் நேரில் சென்றும் தொலைக்காட்சியிலும்,சமூக ஊடகங்களிலும் பார்வையிட்டனர்.

இந்நிலையில் உலகக்கோப்பையை ஏந்தியபடி, இன்ஸ்டாகிராமில் மெஸ்ஸி பதிவேற்றிய புகைப்படமானது  ஐந்தரை கோடி லைக்குகளைப்  பெற்று சாதனை படைத்துள்ளது.

விளையாட்டு வீரர் ஒருவர் பதிவேற்றிய புகைப்படத்திற்கு இத்தனை லைக்குகள் கிடைப்பது, இதுவே முதல்முறை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதற்குமுன்னர் லூயி வுய்டோன் ஆடை நிறுவன விளம்பரத்திற்காக மெஸ்ஸியுடன் செஸ் விளையாடுவதுபோல் கிறிஸ்டியானோ ரொனால்டோ பதிவேற்றிய புகைப்படம், 4.25 கோடி லைக்குகளைப்  பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .