2021 நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

தலாய்லாமாவை முடிவுசெய்ய சீனாவுக்கு அருகதை இல்லை

Editorial   / 2021 ஒக்டோபர் 26 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 அடுத்த அதாவது 15ஆவது தலாய்லாமாவை முடிவுசெய்யும் உரிமை சீனாவுக்குக் கிடையாது. தற்போதைய தலாய்லாமா அதனை முடிவு செய்யலாம். இவ்விடயத்தில் இந்திய ஆதரவு முக்கியம் என்று தவாங் மடாலய மடாதிபதி க்யாங்பங் துல்கு ரின்போச்சே கூறினார்.

15ஆவது தலாய்லாமாவை முடிவுசெய்ய சீனா  முயற்சித்து வருகிறது. அவர்களுக்கு இந்த உரிமை இல்லை. வாரிசை முடிவுசெய்யும் உரிமை தற்போதைய தலாய்லாமாவுக்கே உண்டு. 

சீனாவில் மதத்தை இல்லாமலாக்க முயற்சிக்கின்றனர். அவர்கள் மதத்தை அரசியலுடன் கலக்கிறார்கள். இது அனைவருக்கும் கவலையளிக்கும் விடயம்.

தலாய்லாமாவை முடிவுசெய்யும் உரிமை சீனாவுக்கு இல்லையென்று அமெரிக்காவும் கூறியுள்ளது. தற்போதைய தலாய்லாமாவும், திபேத்திய அரசாங்கமுமே அடுத்த தலாய்லாமாவை முடிவுசெய்யவேண்டும். இந்திய ஆதரவும் முக்கியம் என்று மாதிபதி ரின்போச் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்குக் கூறினார்.

சீனா, ஆசியாவைக் கட்டுப்படுத்த நினைக்கிறது. ஆனால் அது இந்த 21ஆம் நூற்றாண்டில் சாத்தியமான விடயமல்ல. தற்போதைய தலாய்லாமா தன்னை தான் ஒரு பாரதத்தின் நபர் என்று கூறிக்கொள்கிறார்.  பருப்புபோன்ற உணவுவகைகளையே உட்கொண்டு வளர்ந்ததாகவும் அவர் சொல்கிறார்.

பாரதத்தில் எல்லா தர்மங்களும் ஒற்றுமையாக வாழ்கின்றன.   அதனால்தான் தலாய்லாமா எங்கு அழைக்கப்பட்டாலும் அதைப்பற்றிப் பேசுகிறார் என்றும் ரின்போச் கூறினார்.

பதற்றங்களுக்கு மத்தியிலும் அமைதி செய்தி வழங்கியமைக்கு இந்தியாவுக்கு மடாதிபதி நன்றி தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் பௌத்தம் மீதான பார்வைக்கு மடாதிபதி மகிழ்ச்சியை வெளியிட்டார். பிரதமர் மோடி பௌத்தத்தை ஆதரிக்கிறார். நவம்பரில் பௌத்த கலந்துரையாடல் நடக்கவிருக்கிறது.  அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்றும் மடாதிபதி ரின்போச் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .