Editorial / 2017 ஜூன் 14 , மு.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு ஆதரவு வழங்குவதற்காக, கட்சியின் எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசப்பட்டதாக எழுந்துள்ள முறைப்பாடு தொடர்பாக, சி.பி.ஐ விசாரணை நடத்தவேண்டும் என்று கோரி, திராவிட முன்னேற்றக் கழகம், உயர்நீதிமன்றத்தில், முறையீடு செய்துள்ளது.
கூவத்தூரில் தங்கியிருந்த எம்.எல்.ஏக்களுக்கு பணம் தரப்பட்டதாக, மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ
சரவணன் பேசியதாக, நேற்று முன்தினம் (12), சர்ச்சைக்குரிய காணொளியொன்றை, இந்தியாவின் தனியார் தொலைக்காட்சியொன்று வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், தி.மு.க சார்பில், மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரம், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வு முன், நேற்று (13) முறையீடு செய்தார்.
“நம்பிக்கை வாக்கெடுப்பில், சசிகலா அணிக்கு ஆதரவாக வாக்களிக்க, எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசப்பட்டதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக, சி.பி.ஐ அல்லது வருவாய் புலனாய்வுத் துறை சார்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
“ஏற்கெனவே, பெரும்பான்மையை நிரூபிக்க, தமிழக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்புச் செல்லாது என்று அறிவிக்கக் கோரி, தி.மு.க தாக்கல் செய்த வழக்கு, நிலுவையிலுள்ளது. தற்போது, அதற்கு மேலும் வலுச் சேர்க்கும் வகையில், இந்தக் காணொளி ஆதாரம் வெளியாகியுள்ளது” என்று அவர் முறையீடு செய்தார்.
குறித்த முறையீட்டை மனுவாகத் தாக்கல் செய்யுமாறு, தலைமை நீதிபதி வலியுறுத்தியதையடுத்து, தி.மு.க சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. குறித்த மனு, எதிர்வரும் 16ஆம் திகதி விசாரணக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
39 minute ago
42 minute ago
47 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
42 minute ago
47 minute ago
2 hours ago