2021 நவம்பர் 30, செவ்வாய்க்கிழமை

வாந்தியால் லட்சாதிபதியான மீனவர்

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 08 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


தாய்லாந்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் திமிங்கலம் எடுத்த வாந்தியைக்  கண்டெடுத்ததால் லட்சாதிபதியாக மாறியுள்ளார்.

நியோம் கடற்கரைப் பகுதியைச் சேர்ந்த நராங் பேச்சராஜ் என்ற மீனவரே  திமிங்கலத்தின் வாந்தியிலிருந்து வெளிப்பட்ட ‘அம்பர்‘ எனப்படும் மெழுகு போன்ற பொருளைக் கண்டெடுத்துள்ளார். இதனைச் சோதனை செய்து பார்த்த  போது அது அம்பர்கிரீஸ் என்பது உறுதியானது. 30 கிலோகிராம்  நிறை கொண்ட அம்பர் தற்போது ஒரு மில்லியன் யூரோ மதிப்புக் கொண்டது என்பது தெரியவந்துள்ளது.

அதிக மதிப்புக் கொண்ட வாசனைத் திரவியம் தயாரிப்பதற்கு அம்பர் பயன்படுத்தப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .