Ilango Bharathy / 2021 ஒக்டோபர் 25 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரானில் பதவியேற்பு விழாவில் மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்த ஆளுநரை மர்மநபர் ஒருவர் திடீரென அறைந்த சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான், கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தின் புதிய ஆளுநராக அபிதின் கோரம்என்பவர் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவரது பதவியேற்பு விழாவில் அவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது திடீரென மேடையில் தோன்றிய மர்மநபர் ஒருவர் ஆளுநரின் பின்னந்தலையில் பளார் என அறைந்ததோடு அவரைத் தாக்கத் தொடங்கியுள்ளார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பாதுகாப்புப் பணியில் இருந்த வீரர்கள் குறித்த நபரை அங்கிருந்து அப்புறப்படுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவரின் பெயர் அயுப் அலிசாதே என்பது தெரியவந்துள்ளது. எனினும் இத் தாக்குதலுக்கு சரியான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், இதுகுறித்து கருத்துத் தெரிவித்த ஆளுநர், " சம்பந்தப்பட்ட நபர் யார் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், நான் சிரியாவில் இருந்தபோது எதிரிகளால் சூழப்பட்டு ஒரு நாளைக்கு 10 முறை சவுக்கடி வாங்கி இருக்கிறேன். அந்த எதிரிகளுக்கு இணையாக இவரைக் கருதுகிறேன். இருப்பினும் இவரை மன்னிப்போம்" என்றார்.
9 hours ago
28 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
28 Oct 2025