Shanmugan Murugavel / 2021 ஜூலை 19 , பி.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

பஸ் ஒன்று கொள்கலன் ட்ரக் ஒன்றுடன் போக்குவரத்து நெருக்கடியான மத்திய பாகிஸ்தான் நெடுஞ்சாலை ஒன்றில் இன்று மோதியதாக பொலிஸாரும், மீட்பு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
இதில், குறைந்தது 33 பேர் கொல்லப்பட்டதுடன், 40 பேர் காயமடைந்துள்ளனர்.
நிறைந்திருந்த குறித்த பஸ்ஸில் பெரும்பாலும் ஹஜ் பெருநாள் விடுமுறைக்காகச் சென்ற தொழிலாளர்களே காணப்பட்டிருந்தனர்.
பயணிகள் எண்ணிக்கையை விட அதிகமானோரைக் கொண்டிருந்த பஸ்ஸானது சியல்கொட்டிலிருந்து புறப்பட்டு, விபத்து இடம்பெறும்போது பஞ்சாப் மாகாணத்தின் தனுசா வீதியூடாக பயணித்துள்ளது.
இந்நிலையில், குறிப்பாக எதனால் விபத்து இடம்பெற்றது என்பது இன்னும் விசாரணையின் கீழுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஹஸன் ஜாவீட் தெரிவித்துள்ளார்.
42 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
2 hours ago
3 hours ago