2021 நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

எவர்கிரான்;டே சரிவு ஷிபிங் பொறுமை

Editorial   / 2021 ஒக்டோபர் 10 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அமெரிக்காவுக்கு சவால்விடுவதில் சீன ஜனாதிபதி ஷிபிங் பொறுமையாக இருப்பதற்குக் காரணம் மாபெரும் நிதி அமைப்பான எவர்கிரான்;டேயின் (Evergrande’s collapse) சரிவுக்கான அறிகுறியே என்று  கூறப்படுகிறது.  எவர்கிரான்;டேயின் சரிவு அறிகுறியை உலகம் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கிறது.

இதுபற்றி சிலர், அமெரிக்காவின் லெஹ்மன் பிரதர்ஸ் (Lehman Brothers) அமைப்புக்கு 2008ஆம் ஆண்டு நடைபெற்ற  சரிவு போன்று பீஜிங்குக்கு இது  விரைவில் நடைபெறுமா என்று கேட்கின்றனர்.

ஷி பிங்கினால் ரியல் எஸ்டேட் பாதிப்பை தடுக்கமுடியும். ஆனால் சீனாவின் பொருளாதாரம் இன்னும் ஸ்திரமான வளர்ச்சிக்கு செல்லவில்லையென்று அறியப்படுகிறது. 

எவர்கிரான்;டே சரிவின் துயரமானது  ஷிபிங்கின் ஆளுமையில்  உள்ள சீன பொருளாதாரம் நலிவடை ந்ததை நினைவூட்டுவதாகும். அதனாலேயே அமெரிக்கா மீது ஆதிக்கம் செலுத்தும் முயற்சியில் ஷிபிங் பொறுமையாக இருப்பதாகவும் தருணம் சீனாவுக்கு சாதகமாக இல்லையென்றும்  கூறப்படுகிறது. 

நிதி நிறுவனங்கள்மீது  வர்த்தக நிறுவனங்கள் நம்பிக்கையை  இழக்கும் வகையிலான நெருக்கடிகள்   2008ஆம் ஆண்டு  ஏற்பட்ட  லெஹ்மன் பிரதர்ஸ் சரிவே வழிவகுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .