2023 பெப்ரவரி 02, வியாழக்கிழமை

டுவிட்டர், பேஸ்புக் வரிசையில் அமேசான்

Ilango Bharathy   / 2022 நவம்பர் 16 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 டுவிட்டர், ஃபேஸ்புக் நிறுவனத்தை தொடர்ந்து அமேசான் நிறுவனமும் ஆட்குறைப்பு செய்யத்  திட்டமிட்டிருப்பதாகத்  தகவல் வெளியாகியுள்ளது.

அந்தவகையில் சுமார் 10,000 ஊழியர்களைப்  பணிநீக்கம் செய்ய இருப்பதாகவும், அமேசான் நிறுவன வரலாற்றில் இது மிகப்பெரிய பணிநீக்கமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக நஷ்டம் அதிகரிப்பதால், ஊழியர்களை பணிநீக்கம் செய்யவும், செலவுக் குறைப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தவும் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகளவில் அமேசான் நிறுவனத்தில்சுமார்  16 லட்சத்திற்கும் மேற்பட்ட  ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர் என்பதும்  குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .