2021 ஜூலை 28, புதன்கிழமை

‘டமஸ்கஸ்ஸை இலக்கு வைத்த இஸ்ரேல்’

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 09 , பி.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய சிரியாவை நேற்று இரவு, இஸ்ரேலிய விமானத் தாக்குதல்கள் இலக்கு வைத்துள்ளன.

சிரியத் தலைநகர் டமஸ்கஸ்ஸில் குண்டு வெடிப்புகள் இடம்பெற்றதாக சிரிய அரச செய்தி முகவரகமான சனா அறிக்கையிட்டுள்ளதுடன், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராக  சிரிய வான் கட்டமைப்புகள் இயக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது.

லெபனானிய வான் பரப்பிலிருந்து இஸ்ரேலிய விமானங்கள் வந்ததாக சனா தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குறைந்தது 11 அரசாங்க சார்புப் போராளிகள் கொல்லப்பட்டதாக, மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் கூறியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .