2021 ஒக்டோபர் 22, வெள்ளிக்கிழமை

பூனையைக் காப்பாற்றிய தேசியக் கொடி (வீடியோ)

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 14 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின்  மியாமி(Miami) நகரில் உள்ள விளையாட்டு மைதானமொன்றில் உள்ளூர் காற் பந்துப் போட்டியொன்று கடந்த 11 ஆம் திகதி நடைபெற்றுள்ளது.

இதன்போது குறித்த விளையாட்டு மைதானத்தில் பார்வையாளர்கள் இருக்கும் பகுதியின் மேல் தளத்தில் நுழைந்த பூனை ஒன்று அங்கிருந்து இறங்க முற்படும் வேளை கால் தவறி துணியொன்றில் தொங்கிய நிலையில் காணப்பட்டது.


இதனைப் பார்த்த கீழ்தளத்தில் இருந்த ரசிகர்கள் தாங்கள் வைத்திருந்த அமெரிக்க தேசியக் கொடியை விரித்துப் பிடித்தனர்.

அடுத்த சில நொடிகளில் சுமார் 50 அடி உயரத்திலிருந்து  விழுந்த பூனை, சரியாக தேசியக் கொடியில் விழ இளைஞர்களால் பத்திரமாக மீட்கப்பட்டது. இது குறித்து வெளியான புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X