2021 ஒக்டோபர் 27, புதன்கிழமை

அவசரத்துக்கு சென்றவரால் அவசரமாக தரையிறக்கம்

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 15 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயணி ஒருவர் கழிவறையைப்  பயன்படுத்தியமையால்  விமானமொன்று அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ள சம்பவம் கடந்த 11ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

சைப்பிரஸில் இருந்து சுவிட்சர்லாந்துக்குப் பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் ஒன்றே இவ்வாறு நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென ஒஸ்திரியாவின் கிராஸ் (Graz) விமான நிலையத்தில் வைத்து தரையிறக்கப்பட்டுள்ளது.


குறித்த விமானத்தில் பயணித்த 51 வயதான ரஷ்ய பயணியொருவர் விமானம் புறப்பட்ட நேரத்திலிருந்து கழிவறைக்குள் சென்று பூட்டிக்கொண்டதாகவும், இதனையடுத்து  பயணிகளின்  பாதுகாப்புக் கருதி, சந்தேகத்தின் அடிப்படையில் விமானத்தைத் தரையிறக்கியதாகவும் விமானி தரப்பில் கூறப்படுகிறது.

இதனையடுத்து ஒஸ்திரியா பொலிஸார் குறித்த பயணியைப் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பரிசோதனைக்கு உட்படுத்தியதுடன், விமானத்தின் கழிவறையையும் முழுமையாகச் சோதனை செய்ததாகக் கூறப்படுகின்றது,

மேலும் அச்சப்படும் வகையில் அவரிடம் எதுவும் கண்டறியப்படவில்லை என்பதால் அவரை ரயிலில் அனுப்பி வைத்துள்ளதாகவும் ஒஸ்திரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .