2021 நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

சிலுவைப் போர் வீரரின் வாள் கண்டுபிடிப்பு

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 21 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலுவைப் போர்வீரருக்குச் சொந்தமானது எனக் கருதப்படும் சுமார் 900 ஆண்டுகள்  பழைமைவாய்ந்த வாள் ஒன்று மத்தியதரைக்கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வாளானது இஸ்ரேலுக்கு அப்பால் உள்ள கடலில் முக்குளிப்பாளர் ஒருவரால் கண்டெடுக்கப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது ஹைஃபா (Haifa) என்ற துறைமுக நகருக்கு அருகே இருப்பதால் கடலோடிகள் அங்கு அடைக்கலம் பெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

குறித்த துறைமுக நகர் பல ஆண்டுகாலமாக வணிகக் கப்பல்கள் வந்துசென்ற இடம் என்பதால் பல விலைமதிப்பற்ற தொல்பொருட்கள் அங்கு இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த வாளானது சுத்தம் செய்யப்பட்டபின் காட்சிக்கு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .