2022 ஜனவரி 22, சனிக்கிழமை

உணவருந்த தடை விதித்த உணவகம்

Ilango Bharathy   / 2021 நவம்பர் 24 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

யூடியூப் பிரபலம் ஒருவருக்கு உணவகம் ஒன்று தனது உணவகத்தில் உண்ணுவதற்குத் தடை விதித்துள்ள விநோத சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

சீனாவில் உள்ள ஷாங்ஷா என்ற இடத்தை சேர்ந்தவர் ஹாங். யூடியூப் பிரபலமான இவர் அதிகமான உண்ணும் பழக்கம் உடையவர் என்பதால் தான் உண்ணுவதை வீடியோ எடுத்து  தனது யூடியூப் பக்கத்தில் பதிவேற்றி வருகின்றார்.


இந்நிலையில் அவர் வழமையாக செல்லும் பிரபல உணவகமொன்று அவரை அங்கு உணவருந்த  வரவேண்டாம் என உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து அவ்வுணவகத்தின் உரிமையாளர் கருத்துத் தெரிவிக்கையில் ” ஹாங் அதிகளவில் உண்பதால் நாங்கள் தயார் செய்து வைத்திருக்கும் உணவின் பெரும் பகுதி முடிவடைந்து விடுகின்றது. வாடிக்கையாளர்களுக்கு எங்களால் உணவு வழங்க முடியவில்லை. எனவே தான் அவர் இங்கு  உணவருந்தத் தடை விதித்துள்ளோம் ” என்றார்.

இந்நிலையில் இது குறித்து கருத்துத் தெரிவித்த ஹாங் ‘என்னை உணவகத்துக்குள் அனுமதிக்காதது தவறு. என்னால் அதிக உணவு சாப்பிட முடிகிறது. இதில் என்ன தவறு இருக்கிறது? நான் எந்த உணவையும் வீணாக்கவில்லை. என்னை உணவக நிர்வாகம் பாரபட்சத்துடன் நடத்துகிறது’என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X