Shanmugan Murugavel / 2021 ஜூன் 17 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

இணையப் பாதுகாப்பு, ஆயுதக் கட்டுப்பாட்டு பேச்சுக்களை ஆரம்பிக்க ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் நேற்று இணங்கியுள்ளனர்.
இந்நிலையில், ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னரான ஜனாதிபதி புட்டினுடனான முதலாவது சந்திப்பில், ரஷ்ய எண்ணெய் வலையமைப்பு மீதான இணையவழித் தாக்குதல் இடம்பெற்றால் எவ்வாறு உணருவார் என ஜனாதிபதி புட்டினை ஜனாதிபதி பைடன் வினவியிருந்தார்.
ஜனாதிபதி பைடனுக்கும், ஜனாதிபதிபதி புட்டினுக்குமிடையிலான சந்திப்பானது மூன்று மணித்தியாலங்கள் தொடர்ந்திருந்தது.
இந்நிலையில், ஐக்கிய அமெரிக்கத் தலைநகருக்கும், ரஷ்யத் தலைநகருக்கும் தத்தமது தூதுவர்களை மீண்டும் அனுப்ப ஜனாதிபதி பைடனும், ஜனாதிபதி புட்டினும் இணங்கியிருந்தனர்.
8 hours ago
02 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
02 Jan 2026