2021 நவம்பர் 29, திங்கட்கிழமை

உறங்கிய அகதிகள் மீது ரயில் ஏறியது

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 14 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸ் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பியாரிட்ஸ் நகரானது,  பல்வேறு நாடுகளில் இருந்து வரும் அகதிகளுக்கான பிரதான போக்குவரத்துப் பாதையாக உள்ளது.

இந்நிலையில் கடந்த 12 ஆம் திகதி பியாரிட்ஸ் நகருக்கு வந்த அகதிகள் சிலர் அங்குள்ள ரெயில் தண்டவாளத்தில் உறங்கியுள்ள நிலையில்  அவர்கள் உறங்கிக்கொண்டிருப்பது தெரியாத ரெயில் ஓட்டுனர் ரெயிலைச் செலுத்தியுள்ளார்.

.இதனால் தண்டவாளத்தில் உறங்கிக் கொண்டிருந்த மூவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ள நிலையில், நால்வர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .