2023 பெப்ரவரி 02, வியாழக்கிழமை

இனிமேல் குரல் பதிவு மூலம் கொரோனாவைக் கண்டறியலாம்

Ilango Bharathy   / 2022 செப்டெம்பர் 07 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக நாடுகளில் இருந்து கொரோனாத்  தொற்று இன்னும் நீங்காத நிலையில், இத் தொற்றை எளிமையாக கண்டறிய தொலைபேசி செயலி ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
 
செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படும் இச்  செயலி நோயாளிகளின் குரல் பதிவு மூலம் தொற்றை உறுதி செய்யும்.

அதாவது குறிப்பிட்ட நபரின் மருத்துவ வரலாறு, புகைபிடிக்கும் நிலை போன்ற சில அடிப்படை தகவல்களைப்  பதிவு செய்து, பின்னர் அவர்களின் சில சுவாச ஒலிகளையும் பதிவு செய்ய வேண்டும். அதன்படி மூன்று முறை இருமல், மூன்று முதல் ஐந்து முறை வாய் வழியாக ஆழமாக சுவாசித்தல் மற்றும் திரையில் ஒரு சிறிய வாக்கியத்தை மூன்று முறை வாசிப்பது ஆகியவை இதில் அடங்கும்.

 இவற்றின் மூலம் குறிப்பிட்ட அந்த நபருக்கு தொற்று இருக்கிறதா? என்பதை துல்லியமாக இந்த செயலி தெரிவிக்கும் என நெதர்லாந்தை சேர்ந்த ஆய்வாளர் வபா அல்பவி தெரிவித்தார்.

இச் செயலி 89% அளவுக்கு துல்லியமாக முடிவை காட்டும் என தெரிவித்த விஞ்ஞானிகள், பிற பரிசோதனை முறைகளை ஒப்பிடுகையில் மிகவும் மலிவானது என்றும், குறைவான வருவாய் கொண்ட நாடுகளில் இவற்றை எளிதாக பயன்படுத்தலாம் என்றும் கூறியுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .