Ilango Bharathy / 2021 ஒக்டோபர் 20 , மு.ப. 07:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரண்டு வெவ்வேறு கொரோனாத் தடுப்பூசிகளை கலந்து செலுத்திக் கொண்டால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பதாக சுவீடனில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த ஆய்வுக்காக 7 லட்சம் பேர் பயன்படுத்தப்பட்டனர் எனவும் அவர்களுக்கு முதலாம் கட்டத் தடுப்பூசியாக அஸ்ட்ராசெனேகா தடுப்பூசியும், 2ஆம் கட்டத் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு 2½ மாதங்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது 2 வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்களுக்கு கொரோனாத் தொற்றுத் தாக்கும் ஆபத்து 67 சதவீதம் குறைவாக இருப்பதாகவும், எனினும் 2 தவணையும் அஸ்ட்ராசெனேகா தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தால் , நோய் அபாயம் 50 சதவீதம் மட்டுமே குறைவாக இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .