Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 மே 01 , மு.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
மனநலம் குன்றிய இந்திய வம்சாவழியைச் சேர்ந்த மலேசியர் ஒருவரை, சிங்கப்பூர் அரசு நேற்றைய தினம் தூக்கில் இட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகேந்திரன் தர்மலிங்கம் என்ற 34 வயதான நபரே இவ்வாறு தூக்கில் இடப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் 15 கிராமிற்கு அதிகமாகப் போதைப் பொருட்களைக் கடத்தினால் மரண தண்டனை விதிக்கப்படும் என்ற சட்டம் உள்ளது .
இந்நிலையில் மலேசியாவைச் சேர்ந்த இவர், கடந்த 2009 ஆம் ஆண்டு சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில், தனது கால் தொடையில் மறைத்து வைத்து 42.72 கிராம் ஹெரோயினை கடத்திச் செல்ல முயன்ற குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் சிங்கப்பூரின் போதைப்பொருள் சட்டத்தின் கீழ் கடந்த 2010 ஆம் ஆண்டு நவம்பரில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதோடு, சிங்கப்பூர் நீதிமன்றத்தால் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் திகதி அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவும் இருந்தது.
ஆனால் அவரது தாயாரின் மேல்முறையீடு காரணமாக மரண தண்டனை திகதி ஒத்திவைக்கப்பட்டது.
அதேசமயம் அவரது மரண தண்டனையை எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தனர்.
எனினும் கடந்த 26 ஆம் திகதி நாகேந்திரனின் தாயாரின் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து 27 ஆம் திகதி அவரது மரண தண்டனையை நிறைவேற்றப்பட்டது.
இச்சம்பவமானது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
50 minute ago
52 minute ago
1 hours ago
18 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
52 minute ago
1 hours ago
18 Sep 2025