2021 ஒக்டோபர் 26, செவ்வாய்க்கிழமை

தாயின் சடலத்தை காட்டி ஓய்வூதி்யம்

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 13 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒஸ்திரியா (Austria) நாட்டின் மேற்கு டைரோல்  பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கடந்த ஆண்டு இயற்கை மரணம் எய்திய  தனது 89 வயதான தாயின் சடலத்தை பாதாள அறையில் மறைத்து வைத்திருந்த சம்பவமொன்று அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

66 வயதான குறித்த நபர் தனது வீட்டின் பாதாள அறையில் அவரது தாயின் உடலை ஐஸ்கட்டிகள் மற்றும் பண்டேஜ்களை வைத்து பாதுகாத்து, துர்நாற்றம் வராமல் தடுத்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும் புதிதாக அப் பகுதியில் வேலையில் இணைந்த  தபாற்காரர் ஒருவர் ஓய்வூதியம் பெறும் குறித்த நபரின்  தாயாரை  நேரில் பார்க்க வேண்டும் என்று கூறியதாகவும்,  அதனை அவர் மறுத்து விட்டதால் சந்தேகமடைந்த அவர்  பொலிஸாரிடம் தெரியப்படுத்தியதாகவும்  கூறப்படுகின்றது.

இதனையடுத்து அவரது வீட்டிற்கு விசாரணை நடத்த பொலிஸார் வந்த போதே இச்சம்பவம் வெளிச்சத்துக்குள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் தனது தாயின் ஓய்வூதியப்பணத்தைப் பெறுவதற்காகவே இவ்வாறு செய்துள்ளார் எனவும்,  இதுவரை சுமார் 50 ஆயிரம் யூரோக்களுக்கு மேற்பட்ட தொகையை அவர்  பெற்றுள்ளார் எனவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .