2022 ஜனவரி 25, செவ்வாய்க்கிழமை

பாடசாலையில் துப்பாக்கிச் சூடு; 3 மாணவர்கள் உயிரிழப்பு

Ilango Bharathy   / 2021 டிசெம்பர் 02 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் பாடசாலையொன்றில்   15 வயதான மாணவனொருவன் கடந்த 30 ஆம் திகதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சக மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவிலுள்ள டெட்ராய்ட் நகரத்திற்கு அருகில் இருக்கும் உயர் நிலைப் பாடசாலையொன்றிலேயே  இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இச்சம்பவத்தின் போது ஆசிரியர் உட்பட 6 பேருக்கு பலத்த  காயம் ஏற்பட்டிருந்ததாகவும்,  அவர்கள் தற்போது  வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவனைக் கைது செய்துள்ள பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X