2022 ஜனவரி 25, செவ்வாய்க்கிழமை

விமானத்தில் பூனைக்குத் தாய்ப்பால் கொடுத்த பெண்; அலறிய பயணிகள்

Ilango Bharathy   / 2021 டிசெம்பர் 04 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

விமானத்தில் பூனையொன்றுக்கு பயணியொருவர் தாய்ப்பால் கொடுத்த விநோத சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

அண்மையில் சைராகியூஸ் நகரில் இருந்து அட்லாண்டா நகருக்குப் பயணித்த விமானத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ தினத்தன்று குறித்த விமானத்தில் பயணித்த பெண் பயணி ஒருவர் விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது, திடீரென தான் துணியில் சுத்தி  வைத்திருந்த செல்லப்பிராணியான பூனைக்கு தாய்ப்பால் கொடுக்கத் தொடங்கியதாகவும், இச்செயலால்  அப்பூனை ஆக்ரோஷமாக கத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


மேலும்  பூனையின் சத்தம் அதிகரிக்கவே அதிருப்தியடைந்த சக பயணிகளும், விமானப் பணிப்பெண்களும் தாய்பால் கொடுக்க வேண்டாம் என அப்பெண்ணிடம் கூறியதாகவும், எனினும் அவர் சக பயணிகளின் பேச்சை மதிக்காது, தொடர்ந்து அச்செயலியில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அட்லாண்டா விமான நிலையத்தை அடைந்தபின்னர் அப் பெண்மணி தனியாக அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X