2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

ரக்பி போட்டியில் துப்பாக்கிச் சூடு நடத்திய சிறுவன்

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 17 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் நடைபெற்ற ரக்பி போட்டியின் போது சிறுவன் ஒருவன் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் காயமடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 லாட் பீபிள்ஸ் அரங்கில் மேல்நிலைப்பாடசாலைகள்  மோதிக்கொண்ட ரக்பி போட்டியின் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன் போது பார்வையாளர் அரங்கில் இருந்த குறித்த சிறுவன் துப்பாக்கியால் 4 பேரை சுட்டு விட்டு தன் நண்பனுடன் காரில் தப்பி செப்பிச்சென்றுள்ளதாகவும் இதில் பெண் ஒருவர்  உட்பட 4 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
 

இந்நிலையில் துப்பாக்கிச் சத்தம் கேட்டு மைதானத்தில் இருந்த ரக்பி வீரர்கள் தங்களை தற்காத்துகொள்ள புல் தரையில் குப்புறப் படுத்த காணொளிக்காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .